நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் திடீரென ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

 நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஜூன் 9-ம் தேதி  திருமணம் செய்துகொண்டனர்

இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன் – விக்கி இருவரும் வலம் வந்தனர்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் கடந்த ஜுன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நயன் – விக்கி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுலா சென்ற தம்பதியினர் சென்னை திரும்பினர்

இந்நிலையில் தற்போது விக்கி - நயன் இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்