பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் பட டீசர் இதற்கான புரமோஷன் வேலைகளை பட குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை வெளியாகிறது

அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் தோற்றத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் ஆதித்ய கரிகாலன் மற்றும் வந்திய தேவன் ஆகியோரின் முதல் பார்வை வெளியிடப்பட்டது

இந்த நிலையில் இன்று நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதாபாத்திரங்களின் தோற்றமும் வெளியிட உள்ளது

அது முடிவடைந்த உடன்,  வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்: சோழர்களின் பொற்காலத்தை அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு!