தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர் துறையிலிருந்து மாடித்தோட்டம் வைப்பதற்கான ஒரு குறிப்பிட்ட Kit தமிழக அரசு வழங்குகிறது!

இந்த மாடித்தோட்டம் மற்றும் பல செடி வகைகள் உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட பையை நீங்கள் பெறுவதற்கு முதலில்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்!

மாடித்தோட்டம் பைகளில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண் உரங்கள் அடங்கிய ஒரு ஒட்டு மொத்த தொகுப்பாக இருக்கும்

இந்த பையில் மா,கொய்யா, நெல்லி, பலா, சீத்தா, எலுமிச்சை,சப்போட்டா போன்ற 5 வகையான பழச்செடிகள்  கொண்ட தொகுப்பாக இருக்கும்

இந்த மாடித்தோட்டம் வளர்ப்புக்கான முறையான கையோடு ஒன்று இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும்

இருவகையான தொகுப்புகள் உள்ளன ஒன்று மாடித்தோட்ட தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பு.

மாடி தோட்ட தொகுப்பு Rs.  900 பழச்செடி தொகுப்பு Rs.  200-க்கும்  கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

உங்களுடைய முகவரி பாலினம் ஆதார் எண் செல்பேசி எண் இமெயில் மற்றும் உங்களுடைய புகைப்படம் அதனுடைய புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து இதை பெறலாம்

இந்த தொகுப்பை ஆன்லைனில் பெறுவதற்கு  கீழே உள்ள இணையதளத்தை சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும்